இணையம் ,கடிதம்

அன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
                                                          நான் ஜெயக்குமார்.நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
   அமெரிக்காவில் இருந்து திரும்பிவிட்டீர்களா.
             நான் அனேகமாக அடுத்த வேலைக்காக அல்ஜீரியா  செல்ல வாய்ப்பு கைகூடும் நிலையில் உள்ளது.போனால்,
     நான்கு மாதத்துக்கு ஒரு முறை  இருபது நாள் இந்தியா வரலாம்.
          இதற்கு முன் தோகா (கத்தார்)வில் இருந்த பொழுது, சினிமா,புத்தகங்கள், நண்பர்கள் என அனைத்துமே நமது ஊரில் இருப்பது போன்ற சூழ்நிலையை கொடுத்தது.ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை.ஆனால் இப்போதோ நான் செல்லும் பணியிடத்தில் ஒரே ஒரு நண்பர் மட்டுமே இருக்கிறார்.ஒரே ஆறுதல் இணையம் மட்டுமே.
                   எனவே உங்களுக்கு என் அன்பு வேண்டுகோள் ஒன்று.
                       தங்களுடைய வலைப்பூ மற்றும்  நல்ல இலக்கியத்தரம் வாய்ந்த இணையம் மற்றும் வலைப்பூக்களின் முகவரிகளைப்  பரிந்துரைக்கவும்.விந்தையைப் பாருங்கள்.முன்பெல்லாம் நல்ல புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டன.இப்போது இணையம்.
                             எனினும் ஏதோ ஒரு முறையில் வாசிக்கும் வழக்கம் இன்னும் தொடர்வது மகிழ்ச்சிதானே.
                                                                            என்றும் அன்புடன்
                                                                               ஜெயக்குமார்.

அன்புள்ள ஜெயகுமர்
 இணைய தளங்களை நீங்கள் ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டு தொட்டு வாசித்துச் செல்லலாம். நான் பொதுவாக அதிக இணைய தளங்களை வாசிப்பதில்லை. நான் படிக்கவேண்டிய கட்டுரைகளை எப்படியாவது யாராவது எனக்கு பரிந்துரைசெய்துவிடுகிறார்கள். இணையத்தை ஓர் அளவுக்கு மேல் வாசிக்க வேண்டாம். இன்றைய நிலையில் இணையம் மிக அழகான ஒரு நுழைவாசல். மயக்கும் மோகினிகளும் மிரட்டும் பூதங்களும் பொறிக்கப்பட்டது. இதிலேயே மயங்கி நின்றுவிட்டால் உள்ளே செல்ல முடியாது. புத்தகங்கள் தான் உள்ளறைகள்

ஊரில் இருந்து சூட்கேஸ் நிறைய நூல்களைக் கொண்டுசெல்லவும். வாசித்த நூல்களை சிறிய குறிப்புகளாக எடுக்க முஇட்யலவும். அது உங்களை மிக விரைவில் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும். அதேசமயம் பத்துவருடன்ந் ஆள் தவறாமல் இணையத்தில் மேய்ந்தாலும் ஒரு மேலோட்டமான புரிதலை தாண்ட முடியாது

ஜெ

முந்தைய கட்டுரையூதக்கொலைகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 4