அவதூறு–ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

இதை ஒரு இணையதள விவாதத்தில் படித்தேன். இது உண்மையா? இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை. மேலும் நீங்கள் மேடையில் பேசும் முறையும் இது அல்ல.

” அவரை 2002 ம் ஆண்டு வல்லிக்கண்ணன் விழாவில் சந்தித்திருக்கின்றேன்….

பேச ஆரம்பிக்கும்பொழுதே
*”ஏய் விருது வியாபாரிகளே”* என்று விருது வழங்குவதைப் பற்றி சர்ச்சையை
கிளப்பினார். அது வல்லிக்கண்ணனுக்கான பாராட்டு விழா அந்த மேடையில் அதனைப் பற்றி
பேச வேண்டிய அவசியமில்லை.

அதன்பிறகு பாவம் வல்லிக்கண்ணன் அதற்கு மன்னிப்பு கோரினார்

அவருக்குள்ள வேறுபட்ட கருத்துக்களை தேவையில்லாத மேடைகளில் பேசி பரபரப்பை உண்டு
பண்ணுவதைப் பார்த்தால் ஒருவேளை விளம்பர பிரியரோ என நினைக்கத் தோன்றுகின்றது

என்னுடைய பார்வையில் அவருக்கு அவையடக்கமும் நாவடக்கமும் இல்லை. தான்
எழுத்தாளன் என்கிற திமிர் அதிக அளவில் இருக்கின்றது.

– ரசிகவ் ஞானியார்

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/a676a5c53cc3fca1/bde8ee6b6880e785?hl=en&q=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D#bde8ee6b6880e785

சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

நான் வல்லிக்கண்ணன் விழா எதிலுமே கலந்துகொண்டதிலை. வல்லிக்கண்ணனை நேரில் பார்த்ததும் இல்லை. எந்த மேடையிலும் விருது வழங்குதல் , பெறுதல் பற்றி எப்போதும் எதுவும் பேசியதில்லை. பொதுவாக கட்டுரைகளாக எழுதி வைத்து அவற்றை பேசுவதே என் வழக்கம். அவை அப்படியே அச்சிலும் வந்துவிடும். என் பேச்சின் தொனி எப்போதுமே கட்டுரைத்தன்மை கொன்டதாகவும், அடிபப்டைச் பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வாகவும்தான் இருக்கும்.

ஒரு தேர்ந்த ‘ஜென்டில்மேன்’ தோரணையில் சொல்லப்பப்ட்டுள்ளது வெறுப்பு கமழும் இந்த அவதூறு. சொன்னவர் யாரென தெரியவில்லை. இணையத்தில் என்னைப்பற்றி இப்படி பற்பல அவதூறுகள் உலவுகின்றன. அவற்றை எனக்கு சுட்டி அனுப்பி ஐயம் கேட்பவர்கள் ஏராளம். பெரும்பாலும் ஒரே பதிலையே எல்லாருக்கும் அனுப்புகிறேன்.

என்னைப்பற்றி ஏதாவது உண்மை பிரசுரமானால் எனக்கு இனி தெரிவியுங்கள் போதும்

முந்தைய கட்டுரைதீண்டாமைக்கு உரிமை கோரி
அடுத்த கட்டுரைஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்