சுராவின் குரல்

நண்பர் பவா செல்லத்துரை நடத்திவந்த முற்றம் என்ற அமைப்பில் சுந்தர ராமசாமி பேசியதன் ஒலிப்பதிவு இது. அவரது குரலைக் கேட்டபோது பழைய நினைவுகளுக்கு திரும்புவதுபோல உணர்ந்தேன். சுராவின் உரை கண்டபடி அலையாது ஆனால் இயல்பாக ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லும்.

இப்போது இத்தனை வருடங்களுக்குப்பின் கேட்கையில் அவரது உச்சரிப்பில் உள்ள மலையாள நெடி மிகவும் கவர்கிறது. உதாரணமகா கவனி என்ற கெவுனி என்றுதான் சொல்கிறார். கூடவே அவரது வழக்கமான பிராமண உச்சரிப்பும் உள்ளது

அவர் கருத்துக்களைச் சொல்லிக் கேட்கும்போது அவரது பேசுமுறைக்கு மிக நெருக்கமாக நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. அதேபோல இப்போது நண்பர் யுவன் சந்திரசேகர் பேசுவதிலும் சுராவின் சாயல் வலுவாகப்படிந்திருக்கிறது.


சுரா உரை

முந்தைய கட்டுரைமார்ட்டின் லூதரும் சங்கரரும் : ஒரு எதிர்வினை
அடுத்த கட்டுரைஇங்கே, இங்கேயே… [சிறுகதை]