க.நா.சு.கடிதங்கள்

ஜெயமோகன் எப்படி இருக்கிறீ்ர்கள்? சமீபத்தில் தீராநதியில் க.நா.சு குறித்த தங்களின் கட்டுரையைப் படித்தேன். அவரைப் பற்றிய அவதானிப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. மேலும் எனக்கு அவர் ஒரு இலக்கிய வாசிப்பிற்கான வழிகாட்டி. ஸ்ரீநேசன்தான் எனக்குக் க.நா.சு.வை அறிமுகம் செய்தவர். பிறகு அவருடைய படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்தேன். தவிரவும் இன்று புதிதாக வரும் வாசகர்களுக்குக் க.நா.சுவைதான் பரிந்துரை செய்கிறேன். அவரின் வாசகத் தன்மையை இலக்கிய நுண்ணுணர்வு என்ற பதத்தில் பெருமைபடுத்திவிட்டீர்கள். சந்தோஷம். அவரின் படைப்பை மட்டுமல்லாது ஆன்மாவையும் வெளிப்படுத்தினீர்கள். இதைப் போன்ற கட்டுரைகளை நான் ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.

ராணி திலக்

அன்புள்ள ராணிதிலக்

நலம்தானே?

நன்றி. இலக்கிய விமர்சகன் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் அவன் ஒரு காலகட்டத்தை மட்டும் சார்ந்தவன். அவன் எப்போது தன் இலக்கில் வெற்றி பெறுகிறானோ அப்போதே அவன் தேவை முடிந்துவிடுகிறது. அதன்பின்னர் அவனை நாம் வரலாறாகவே நினைவில் நிறுத்தவேண்டியிருக்கிறது. தொடர்ச்சியாக நினைவில் நிறுத்தப்படாத வரலாறுகள் மறைந்து போகும். க.நா. சுவை நினைக்க இந்த ஆண்டு ஒரு நல்ல காரணமாக அமையட்டும்

அன்புள்ள ஜெ

க.நா.சு பற்றிய கட்டுரை வாசித்தேன். சிற்றிதழ் பாணியில் போரடிக்காமல் நன்றாகத் தொடங்கி அழகாக முடிந்த கட்டுரை. நல்ல வாசிப்பனுபவம் உடைய படைப்பு. க.நா.சுவின் பணி என்ன, அவரது சாதனை என்ன எல்லாவற்றையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் திட்டவட்டமான சுருக்கமான பதில். இணைப்புகளும் பயனுள்ளவை

செம்மணி அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்

நன்றி

எப்போதுமே இலக்கிய விமர்சகன் பலவகையிலும் வெறுக்கப்படுவன். விமர்சனம் விமர்சனங்களையே உருவாக்கும். ஆகவே க.நா.சு பற்றிய எதிர்ப்புகள் இயல்பானவையே. பதில்களும்

ஜெ

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி..

முந்தைய கட்டுரைகையும் தொழிலும்
அடுத்த கட்டுரைதேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்