யுவன் சந்திரசேகருக்கு விருது

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

கனடாவை மையமாக்கி இயங்கும் இலக்கியத்தோட்டம் அமைப்பின் இவ்வருடத்திய நாவலுக்கான விருது யுவன் சந்திரசேகர் எழுதிய பயணக்கதை என்ற நாவலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. லட்ச ரூபாயும் பாராட்டுப்பத்திரமும் அடங்கிய விருது இது.

யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகரின் நாவல்களின் சிறப்பியல்புகள் என உதிரிக்கதைகளின் தொகுப்பாக அமையும் கூறுமுறை, உரையாடல்களை சுவைபட அமைக்கும் திறன், மனிதவாழ்க்கையின் தற்செயல்களை இணைப்பவை என்று தோன்றும் புதிரான ஒத்திசைவுகளை கவனிக்கும் பார்வை [அதை அவர் மாற்றுமெய்மை என்கிறார்] ஆகியவற்றைச் சொல்லலாம். அவ்வியல்புகள் சிறப்பான கலைத்தன்மையுடன் திரண்டுவந்த நாவல் என பயணக்கதையைச் சுட்டலாம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

யுவன் சந்திரசேகருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

யுவன் பற்றி


ஏற்கனவே – கிரிதரன்


ஏற்கனவே -குகன்


கானல்நதி- மதுரைவாசகன்


ஏற்கனவே -யாழிசை

இசைக்கமறந்த கலைஞன்

யுவன் படைப்புகள்

நான்காவது கனவு


சுவர்ப்பேய்

யுவன் பழைய பதிவுகள்

யுவன் கவிதைகள் வாசிப்பரங்கு


சொல்லிச்சொல்லி எஞ்சியவை


மாற்றுமெய்மையின் மாயமுகம்


சிறியவிஷயங்களின் கதைசொல்லி


கதைநிலம்


கதைகளின் சூதாட்டம்


கதையாட்டம்

யுவன்

முந்தைய கட்டுரைநாத்திகம், இலக்கணம்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை கடிதம்