«

»


Print this Post

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்


தங்கள் கீதை குறித்த கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளீர்கள்:
"கீதையின் காலத்தை பாலகங்காதர திலகர் தன்னுடைய கீதா ரகஸியம் நூலில் மிகமிகப் பின்னுக்குத் தள்ளி கி.மு.3100ல் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார். காலக்கணிப்புகள் பற்றிய ஒரு பொதுப்புரிதல் உருவாகாத கால கட்டத்து உருவகம் இது என்பதுடன், கீதையை 'கல்தோன்றி மண்தோன்றா' காலத்திற்கு கொண்டு செல்லும் வாஞ்சையும் இதில் தெரிகிறது."

கீதா ரகஸியம் நூலில் இந்த காலநிர்ணயம் எங்கே கூறப்பட்டுள்ளது என தயை செய்து தெரிவிக்க முடியுமா? ஏனெனில் திலகர் தம் கீதா ரகஸ்யம் (கீதை ஆய்வுரை) நூலில் அந்நூலின் கால நிர்ணயம் குறித்து பல்வேறு கருத்துகளை -குறிப்பாக மேற்கத்திய கருத்துகளை- கூறிவிட்டு ஆனால் அவை புற ஆராய்ச்சிகள் என்றும் அத்தகைய ஆராய்ச்சி தம் நூலின் நோக்கமல்ல என்றும் கூறுகிறார். ஆனால் இந்த ஆராய்ச்சி முடிவுகளை தொகுத்தளிக்கிறார்: "இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கீதையில் காணப்படும் பழமையான சொல்லமைவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, இந்த நூல் கிறிஸ்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அது மட்டுமன்றி கீதையில் விவரிக்கப்பட்டுள்ள பக்தி மார்க்கம் (பிற்காலத்தில் தோன்றிய) கிறித்துவ மதத்திலிருந்து தழுவப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.: இது முற்றிலும் ஆதாரமற்ற கூற்றாகும். மற்றொரு ஆராய்ச்சியாளர் கீதையின் 16-ஆவது அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நாத்திகவாதக் கருத்துக்கள் அனேகமாக பௌத்த சமயக் கருத்துக்களாக இருக்கலாம் என்றும் அனுமானித்து கீதை புத்தர் காலத்திற்குப் பிறகு தோன்றியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இன்னொரு ஆராய்ச்சியாளர் ...கீதை பிரம்ம சூத்திர காலத்துக்கு பின்னர் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என சாதித்துள்ளார்....இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய் யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு பிரமஞானத்தை போதிப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும், இந்த அற்புதமான வேதாந்த ஆய்வு நூல் பிற்காலத்தில் மகாபாரதத்தில் யாரோ ஒருவரால் இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். இத்தகைய புறநிலை ஆராய்ச்சிகள் எல்லாம் பயனற்றவை என்று கூறிவிடமுடியாது...ஆனால் எந்த ஒரு நூலின் மறை பொருளையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் இப்படிப்பட்ட புறநிலை ஆய்வில் நேரத்தை வீணாக்கக் கூடாது." (கீதை ஆய்வுரை 1915 (தமிழ் 2001) பாகம்:1 பக் 11-13) இம்முன்னுரையில் கீதையின் காலகட்டத்தை மிகவும் கீழே கொண்டு வரும் ஆராய்ச்சிகளை எவ்வித கண்டனத்துக்கும் உள்ளாக்காமல் திலகர் குறிப்பிடுகிறார் என்பதை கவனிக்கவேண்டும். அவர் கண்டிக்கும் ஒரே 'ஆராய்ச்சி' கீதைக்கு கிறிஸ்தவ தாக்கத்தை கற்பிக்கு உள்நோக்கம் கொண்ட 'ஆராய்ச்சி'யை மட்டுமே. வேதத்தின் காலகட்டத்தை நிர்ணயிக்கும் ஆராய்ச்சி நூலின் (ஓரையன்) முன்னுரையில் (1893) மகாபாரத-இராமாயண காலகட்டத்தை வானியல் அடிப்படைகளில் கிமு 5000-6000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர் சிலரின் தரவுகளை தாம் இந்நூலில் பயன்படுத்தவில்லை என சுட்டிக்காட்டுகிறார். திலகரின் ஆராய்ச்சிகளின் முடிவுகள் மரபுசார்பாளர்களுக்கு அப்படி ஒன்றும் ஆனந்தம் அளிப்பவை அல்ல. (இன்று நிராகரிக்கப்பட்ட) ஆரியரின் ஆர்டிக் தாயகமாகட்டும், (புராண காலநிர்ணயங்களை தவிர்த்திட்ட,இன்றைக்கும் ஆரியபடையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு தொல்லை அளிக்கக்கூடிய வானியல் அடிப்படையிலான காலநிர்ணயத்தை தெளிவாக அளித்திடும்) 'ஓரையன்' ஆகட்டும், திலகர் ஒரு பொற்கால சித்திரத்தை அளிக்கவில்லை. திலகர் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி. தீண்டாமையை எதிர்த்தார் அதே நேரத்தில் சாதி கட்டுப்பாடுகளை முழுமையாக மறுதலிக்க அவரால் இயலவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் வேதங்கள் பயிலுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்ர் சார்ந்திருந்த சித்பவன் அந்தண வகுப்பினரே பிற அந்தணர்களால் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டு வந்ததுதான். சித்பவன் அந்தணர் குறித்த ஐதீக கதைகளின் ]]
>

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/275