புதிய பிரபஞ்சம் பற்றி

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் வலைத்தளத்தில் கடந்த 27 /09 /11 அன்று “புதிய பிரபஞ்சம்” என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அறிவியல் கட்டுரையில் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்றும் இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது. முதலில் தோன்றிய எண்ணமே இந்த ஆய்வின்மீது மாற்றுக்கருத்துக்கள் என்னென்ன வருகின்றன என்று கவனிக்கவேண்டும் என்றுதான். அது ஒரு எச்சரிக்கைமனநிலை என்றும் மேலும் ஒளியைவிட அதிகவேகத்தில் ஒரு துகள் செல்லமுடியும் என்றால் ஐன்ஸ்டீனின் e=mc2 என்ற புகழ்பெற்ற சூத்திரம் பிழையாக ஆகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் காலதூர பரிமாணங்கள் பற்றிய இதுவரையிலான பல கொள்கைகளை முழுமையாக மாற்றியமைக்கவேண்டியிருக்கும். இதுவரை பெரும்பாலான அணுவிஞ்ஞானிகள் ஐயத்துடன்தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று காலை வரை வந்துகொண்டிருக்கும் செய்திகள் இச்சோதனைமுடிவுகள் உறுதிசெய்யப்படும் என்ற எண்ணத்தையே உருவாக்குகின்றன. அப்படி நிகழ்ந்தால் அது ஒரு மகத்தான மானுடநிகழ்வுதான் என்றும் எழுதி இருந்தீர்கள்.

ஆனால் இன்று (01 /03 /12 ) ‘ஹிந்து’ வில் வந்த செய்தியில் ஒளியைவிட அதிகவேகத்தில் ஒரு துகள் செல்லமுடியும் என்ற ஆராய்ச்சியில் தவறு உள்ளதாகக் கூறப்பட்டு இருக்கிறது. இதைத் தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

அச் செய்தியின் சுட்டியை கீழே கொடுத்து இருக்கிறேன்.:

http://www.thehindu.com/sci-tech/science/article2924054.ece

அன்புடன்,

அ.சேஷகிரி,

ஆழ்வார்திருநகரி.

முந்தைய கட்டுரைமாடு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமானுட ஞானம் அழிகிறதா?