ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

ஆற்றூர் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை அவரைச்
சந்தித்ததில்லை. ஒரு ஓணக் காலத்தில் தொலைபேசியிருக்கிறேன் – பொன் ஓண
ஆஷம்சகள் நேர்ந்நபோது ‘மழயோணமா இவிடெ’ என்றார். அவரை ஜெ.ஜெ மாடலில்
கற்பனை செய்திருந்தேன் :-) கல்பற்றா அவ்ருடைய மாணவர் என்பது புதிய செய்தி.

அன்புடன்
இரா முருகன்

அன்புள்ள நண்பர் இரா முருகன்

ஆற்றூரை உங்களுக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிக ஆழமான ஆளுமை. பல பட்டைகள் கொண்டவர். இன்று அவரை பார்க்கும்போது பழைய புரட்சிக்காரரை காண்பது சிரமம். இப்ப்போது எல்லாமே ஒரு சிரிப்புதான்.

கல்பற்றா நாராயணன் மட்டுமல்ல கேரள கவிஞர் திருநெல்லூர் கருணாகரன், இதழாளர் கெ.ஸி.நாராயணன் போன்ற பலரும் அவரது அன்புக்குரிய மாணவர்களே

ஆற்றூர் ஓய்வுபெற்ற பின் மிகத்தீவிரமான ஒரு வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்தார். தமிழ் கற்று மொழிபெயர்த்தார். இமைய மலைக்கு வருடம் தோறும் போக ஆரம்பித்தார்– விபத்தில் சிக்கி நரம்புச்சிக்கல் கொண்ட காலுடன். தீவிரமாக இசைகேட்க ஆரம்பித்து வருடம்தோறும் பூனாவுக்கும் சென்னைக்கும் திருவையாறுக்கும் இசைவிழாவுக்கு போக ஆரம்பித்தார்

அவரிடமிருந்து கற்பதற்கு ஏராளம்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகொற்றவை – ஒருகடிதம்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவம் ஒரு கடிதம்