சஞ்சய், கடிதங்கள்

ஜெ..

னாலும் மலையாளிகளுக்கு லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தி. து பாலக்காட்டுக் கணவாய் ழியே ழிந்து கோவை மண்டலத்திலும் கொஞ்சம் ஓடுகிறது போல. செம்பையின் ஒன்பது வேளை விரதம் படித்துப் பல் சுளுக்கிக் கொண்டு விட்டது

பாலா

 

அன்புள்ள பாலா,

மலையாளிகள் மிகவும் நேசிக்கிறவர்களைத்தான் நிறையவே கிண்டல்செய்கிறார்கள். செம்பை கேரளத்தில் ஒரு பெரிய ஆளுமை. அவரை வழிபடுகிறார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு. ஒன்று, செம்பை முற்போக்கானவர். சாத்¢ மத ஆசாரங்களை பேணியவர் அல்ல.[ ஆனால் பலகாலம் ஸ்வாதி சங்கீத கல்லூரி முதல்வராக இருந்த செம்மங்குடி அப்படி அல்ல] அத்துடன் அவர் தன்னை அய்யராக, தமிழராக முன்வைக்கவில்லை [கெ.வி.நாராயண சாமி, பாலக்காட்டு மணி போல] அவர் தன்னை மலையாளியாகவே முன்வைத்தவர். இந்த இருகாரணத்தாலும் அவர் அங்கே அனைவராலும் விரும்பப்படக்கூடியவர். ஒரு கலாச்சாரச்சின்னம். குருவாயூரில் செம்பை சங்கீத உத்ஸவம் இன்று அவரை மெல்லமெல்ல ஒரு கடவுள் இடத்துக்குக் கொண்டுசெல்கிறது.

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெமோ

சஞ்சய் சுப்ரமணியனைப்பற்றிய உங்கள் குறிப்பு உணச்சிபூர்வமானது.  சங்கீதத்தின் முன்னால் நீங்கள் உங்கள் சிருஷ்டிகர்வத்தை விட்டுவிட்டு இருப்பது  தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பண்பு. எங்கே போனாலும் நான் இன்னாராக்கும் என்ற கர்வத்தை சுமந்து செல்லாமல் இருந்தாலே நல்ல கலைகளை ரசிக்கக்கூடிய மனப்பக்வம்ல வந்துவிடும். சங்கீதத்தைப்பற்றி தமிழ் எழுத்தாளர்களில் தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் எல்லாம் தன்னடக்கத்துடன் கருத்து சொன்னவர்கள். இப்போது சிலர் எழுதுவதைப் பார்த்தாலே அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஸ்பஷ்டமாக தெரியும். நல்ல சங்கித ரஸிகன் என்றால் கருத்து சொல்லும்போது எப்படியோ அவனுடைய சொந்தமான observation ஒன்று வந்து விழுந்துவிடும். அதை நாம் பிறகு வேறு எங்குமே காணமுடியாது. அந்தமாதிரி அது அசலாக இருக்கும்

அப்படி அஸலாக ஒன்று சொல்லமுடியாமல் ஏதாவது கருத்துக்களை அங்கே இங்கே கேட்டுவிட்டு எழுதுபவர்களும் பேசுபவர்களும் தங்களைத்தாங்களே கேலிசெய்துகொள்கிறார்கள். சமீபத்தில் ‘கலகம் காதல் இசை’ என்ற ஒரு நூலை படித்தேன். உங்கள் ‘நண்பர்’ சாரு எழுதினது [காம்பரமைஸ் ஆகிவிட்டீர்கள் போல] . ஒரு ஸ்ரீலங்காதமிழர் கொடுத்தார். அந்த நூலைப்போல அபத்தமான ஒரு சங்கீத நூலை நான் சமீபத்திலே வாசித்ததில்லை. அப்பட்டமான தப்புகள், தப்பாக புரிந்துகொண்ட விஷயங்கள் ஏராளம். தொடர்ச்சியாக இந்த இசைகளை கேட்டு வருபவன் என்ற முறையிலும் இதையே  proffession ஆக கொண்டிருப்பவன் என்ற முறையிலும் அந்த புத்தகத்தைப்பற்றி எனக்கு வந்த எரிச்சல் இம்மாதிரி அம்மாதிரி அல்ல. ஆனால் என்ன செய்வது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் என்றால் என்ன வேணுமானாலும் எழுதலாமே. வாசிக்க ஒரு முட்டாள்தனமான கூட்டம் ரெடியாக இருக்கிறதே.

சஞ்சய் சுப்ரமணியனைப்பற்றிச் சொல்வதென்றால் அவரது முக்கியமான குறைகள் உங்களுக்கு போகப்போகத்தெரியலாம். அவர் ஆலாபனையை எப்போதும் ஒரே போல செய்கிறார். குரலை நன்றாக வைத்துக்கொள்வதில்லை. குரல் கம்மிப்போகும் இடங்கள் உள்ளன. அப்புறம் முக்கியமான விசயம் அவர் வயோதிகர்கள் பாடுவது போல பாடுகிறார். பாவத்தில் இளமையே இல்லை. நான் அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கே இருந்து பார்க்கும்போது முக்கியமான குறையாக இளம் வித்வான்களிடம் இதுதான் தெரிகிறது, அவர்கள் கமகங்களை கொடுக்கும்போது அதில் தங்கள் குருநாதர்களை பின்பற்றி ஒரு வயோதிக நடுக்கத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். சங்கீதத்தில் ஸம்ப்ரதாயம் நுணுக்கம் எல்லாம் முக்கியம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால்  இளமையும் முக்கியம்தான். ஏனென்றால் அதை ·பாவத்தில் இருந்து பிரிக்க முடியாது.

நல்ல இசை கேட்கிறீர்கள். வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாசன் வரதாச்சாரி 

 

 

அன்புள்ள ஜெயமோகன்;
திரு சஞ்சய் சுப்ரமணியம் பற்றிய உங்கள் பதிவு அருமை.  அதிலும் குறிப்பாக நமக்கும் நம் மனம் விரும்பும் கலைஞன் குறித்த உறவை நீங்கள் எழுதிஇருந்த விதம் கண்டிப்பாக உங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை தான். எவ்வளவோ  உளவியல் சிக்கல்களை சந்திக்கக் கூடிய ஆளுமைப்பன்பை உங்களின் எழுத்து வளர்த்திருக்கிறது. 

 
எனக்கு இசை பற்றி ஒன்றும தெரியாது திரு சஞ்சய் அவர்களின் மேதைமை குறித்தும் தெரியாது ஆனால் மஹாராஜபுரம் சந்தானம் பற்றி எழுதிஇருந்தீர்கள் மாம்பலத்தில் ஒரு இசைக்கடையில் அவருடைய குரலில் எந்தரோ மகானுபாவுலு என்கிற பஞ்சரத்ன கீர்த்தனையை கேட்கிற வாய்ப்பு கிடைத்தது. அந்த குரல் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி நெஞ்சை அடைத்தது என்னையும் மீறி காரணம் சொல்ல முடியாத கண்ணீர் பெருகியது பக்கத்தில் நிற்பவர்கள் குறித்த ப்ரக்யை கூட இல்லை. இசையின் அகர்ஷன சக்தியில் என்னையும்  ஒரு அங்கமாக உணர்ந்த அந்த கணம் இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்க்க வைப்பது.
நீங்கள் எவ்வளவோ சலனங்களை இலக்கிய பரப்பில் ஏற்படுத்தி வருபவர் அவற்றில் சஞ்சயுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை உங்களின் நெகிழ்ச்சி உணர்த்தியது.
அன்புடன்
சந்தோஷ்

 

சந்தோஷ்குமார்
அன்புள்ள சந்தோஷ்குமார்

நல்ல இசை பூமியில் மனிதனால் உருவாக்கபப்ட்டது என்றும் அது எப்படியோ இய்றகையை வெல்கிறது என்றும் நான் எண்ணுவதுண்டு. இசையின் தெய்வீகம் என்பது அதில் உள்ள மனுட அம்சம்தான்.

என்னைப்பொறுத்தவரை நான் மிகச்சிறந்த இசை ரசிகர்களால் சூழப்பட்டிருக்கிறேன். ஷாஜி, சுகா , யுவன் சந்திரசேகர். இசையைப்பற்றி பேசிக்கொள்ளாத நாளே அனேகமாக இல்லை. கொஞ்சமாவது கேட்காத நாளும் இல்லை. அது என் நாட்களை மென்மையானதாக வைத்திருக்கிறது. என் இடைவெளிகளை நிரப்புகிறது

ஜெ 
அன்புள்ள ஜெ

சஞ்சை சுப்ரமணியனைப்பற்றி நீங்கள் எழுதிய ஆத்மார்த்தமான குறிப்பை மிகவும் விரும்பி ரசித்தேன். சங்கீதத்திலே ஒரு வழக்கம் உண்டு. அதை நீங்கள் இன்னும் உள்ளே வந்தால் உணர்ந்துகொள்வீர்கள். இங்கே யாரும் யாரையும் மனசு விட்டு பாராட்டமாட்டார்கள். பாராட்டினால் பாராட்டுபவனுக்கு சங்கீதம் சரியாகத்தெரியவில்லை என்று நினைத்துக்கொள்வார்களோ என்ற பயம்தான் காரணம். ‘நல்லாத்தான் பாடினேள் ஆனாப்பாருங்கோ…’ இம்மாதிரி ஆரம்பிப்பதுதான் இங்கே பெரிய பேஷன். நன்றாகப் பாடியபின்பு ஒரு மனம் திறந்த பாரட்டுகூட கிடைக்காமல் போகிறவர்கள் இங்கே ரொம்ப ஜாஸ்தி.

அதேபோல மனம் நெகிழ்ந்து பாட்டு கேட்பவர்கள் கூட பேசாமல் போய்விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தாங்களுக்கு சங்கீதம் தெரியாதோ என்று பயம். இன்னொரு விஷயம் ஒரு அர்த்தமும் இல்லாத அபத்தமான பாராட்டுக்கள். சம்பிரதாயமான பாராட்டுக்கள். அந்தப்பக்கம் தலை நகர்ந்ததுமே குறை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். மனம் விட்டு பாராட்டுவது என்பது எங்கோ யாரோதான். அதுவும் அசந்த நேரமாக கிடைத்தால்தான். இது சஞ்சை சுப்ரமனியனுக்கும் அனுபவம்தான் என்று நினைக்கிறேன்

நீங்கள் சஞ்சையை மனம் விட்டு பாராட்டியிருக்கிறீர்கள். அருமையான மொழி. உயர்ந்த வார்த்தைகள். அவருக்கு இது முக்கியமான பாராட்டு. இதைப்போல பல பாராட்டுகளுக்கு தகுதியானவர் அவர். பெரிய பாடகர். இளமையிலேயே நல்ல பாடாந்தரம். நல்ல கற்பனை. அதைவிட உயர்ந்த டெடிகேஷன். அவரை உங்களைப்போன்றவர்கள் கேட்டு பராட்டுவது சங்கீதத்துக்கே செய்யும் மரியாதைதான்

கல்யாண்

 

செம்பை

சஞ்சய் சுப்ரமணியம்

 

முந்தைய கட்டுரைகுடும்ப எழுத்தாளர்
அடுத்த கட்டுரைகுரு:கடிதங்கள்