இணையதளச்சிக்கல்

இந்த இணையதளம் அடிக்கடி Database error என்று காட்டுவதகாவும் திறக்க மிகவும் தாமதமாவதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். இணையதளத்தை நிர்வகிக்கும் நண்பர்களிடம் இதை தெரிவித்தேன். இப்பிரச்சினையை அவர்களும் சரிசெய்துகொண்டிருந்தார்கள்.அவர்களின் கடிதங்கள்

*

ஜெ,

வெப் ஹோஸ்டிங் ஆசாமியை மறுபடி கூப்பிட்டு கேட்டேன். இணையதளம் பெரிதாகிவிட்டது. படிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. இப்போதைய சர்வர் வசதிகள் போதாது. தளம் சில நாள் நன்றாக வேலை செய்யும். சில நாள் இழுத்தடித்து தொங்கும். எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டான்.

அதனால் இன்று இணையதளத்தை இன்னும் அதிக வசதிகள் உள்ள வேறு ஒரு சர்வருக்கு மாற்றுகிறோம். இதில் நமக்கென்று தனி இடம் ஒதுக்கி விடுவார்கள். அதனால் தளம் இன்னும் வேகமாக வேலை செய்யும். முக்கியாக, தொங்காது.

அமெரிக்க நேரப்படி இன்று (Aug 22) இரவுக்குள் இதை செய்து முடிக்க உள்ளோம். புதிதாக எதாவது எழுதினால் அதை எதற்கும் தனியாக ஒரு காப்பி எடுத்து சேமித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*

அன்புள்ள ஜெ,

நமது தளம் தற்போது செயல்பட்டு வரும் விதத்தில் பல பிரச்சனைகள் இதுவரை எடுத்துச்சொல்லப்பட்டுள்ளது. பற்பல அலுவலக வேலை பளு காரணமாக என்னால் அதில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சரியான கவனம் செலுத்தி பார்க்க முடியவில்லை. இந்த வாரத்தில் அனைத்து பிரச்சனைகளையும் சரியான விதத்தில் தீர்த்து வைத்துவிடுகிறோம்.

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவின் அரசியல்
அடுத்த கட்டுரைஅன்னா வெல்வாரா?