இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=15069

படித்தேன். அருமையாக அதே நேரம் படிப்பவர் மனம் கோணாத படி அழகாக எழுதியுள்ளீர்.

வர வர எவரிடமும் மனதை விட்டு அறிவை ஏற்றிப் பேச முடியவில்ல. எல்லோரிடமும் ஒரு (தேவையில்லாத நடிப்பு) போலிப்  பணிவு அல்லது அதி மீறிய பெருமிதம் இவையே காண முடிகிறது. ஒரு ஞானத் தேடலைக் காண்பது அரிதாகிறது. எல்லோரிலும் ஒரு தேவையில்லாத குழந்தைத்தனம் (ரசிக்க முடியாத) குடி கொண்டுள்ளது போல சலிப்பை தருகிறது. மனிதனைப் பார்ப்பது அவன் மனதைப் பார்ப்பது சுகம் தான்.

ஆனால் ஆழமாக யோசித்து உண்மையான பணிவு, பெருமிதம் சேர்ந்து நிதானமாகப் பார்க்கும் நிலை கொண்ட மனிதரைப்பார்ப்பது இவ்வளவு அரிதாகும்போது பயமாகவே உள்ளது. ஒரு வேளை நாம் தான் சின்ன விஷயங்களுக்குக் கூட sensitive ஆகி விட்டோமோ என்ற பயம் கூட சேர்ந்துவிடுகிறது.

“Story of philosophy” உங்கள் பதிவிற்குப் பிறகு இரண்டாம் முறை படிக்கிறேன். முதல் முறை படித்த ஞாபகமே இல்லாதது போல உள்ளது. spinoza படித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் பயணக்கட்டுரைகள் படித்தேன். நீங்கள் மீண்டும் பூட்டான் செல்வீர்கள் என்றே தோன்றுகிறது.

“அசோக வனம்” பதிவு படித்தேன். உண்மைச் செய்தி தானே ?

ஸ்ரீதர்

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள “விதி சமைப்பவர்கள்” பதிவில் கூறுவதன் சாரத்தைத்தான் நான் அயன் ராண்ட் படித்து விவாதித்துப் புரிந்து கொண்டேன்.

“atlas shrugged”  அந்த மனோநிலையின் ஒரு  உணர்சிகட்ட உச்சம் …அவ்வளவே …

சராசரிகள் படைப்பாளியை சாதனையாளனை கேலி பேசி வருவது,பல வகையான மிரட்டல்கள் (நேரடி மிரட்டல், பொருளாதார மிரட்டல், உணர்ச்சிவயமான மிரட்டல் (Emotional blackmail) என்று பல வகையில்).

இந்த சூழ்நிலையில் ஒரு சாதனையாளன் தோற்கும் போது (அல்லது “புறத் தேர்வுகளின், உலகப்  பார்வையில்” வெற்றி பெறாத நிலை)   அவனுக்கு ஒரு நியாயம் இருக்கும். அவன் ஒரு underdog மனோ நிலையில் இருப்பான். அது ஒரு விதத்தில் தேவலை..ஏனென்றால் அவனுக்குத் தன் படைப்பு மேல் ஒரு வெறி இருக்கும். சுயத்தை நிராகரிக்க மாட்டான்.

ஆனால் வென்று முடித்தவுடன் தெளிவில்லாமல் தன் வெற்றியைக்  குறித்துக் குற்ற உணர்ச்சி, போலி மானிட நோக்கில் “எல்லாம் சமம்’’என்று பேசித் தன்னையே ஏமாற்றி கொள்ளும் நிலை, வெற்றிக் களிப்பில் இருக்கக்கூடாது என்று தீவிர சுய எதிர்ப்பு,
“நாம ரொம்ப ஆடக்கூடாது” என்று போலிப் பணிவு (“false humility” ).

இத்தகைய மனோ நிலைகள் அவனைத் தன் வேலையைச் செவ்வனே செய்ய விடாது…தன் சுயத்தை இழக்கத் தூண்டும்…

அந்தக் குற்ற உணர்ச்சி தேவை இல்லை…வாருங்கள் நாம் புது விதி சமைப்போம்…என்பதன் வெளிப்பாடே “atlas shrugged”..
இதை Ayn randஇன் புதினமல்லாத படைப்புகளைப் படித்து…என் நண்பனுடன் விவாதித்துத் தெளிந்தேன் ….பிளாட்டோவை விடத் தான் அரிஸ்டாடிலையே விரும்புவதாக ayn rand பல விவாதங்களில் பதிப்புகளில் சொல்லியுள்ளார்  (வேறு காரணத்திற்காக )

உங்களிடம் விதண்டாவாதம் செய்யும் நோக்கில் எழுதவில்லை…(நீங்கள் இதற்கு ஏற்கனவே பதிலும் எழுதியுள்ளீர்கள் )

பகிர்ந்து கொள்ளத் தோன்றியது . உங்களைச் சோர்வடையச் செய்வது நோக்கமில்லை…

காதலுடன்
ஸ்ரீதர்

முந்தைய கட்டுரைகொற்றவை கடிதம்
அடுத்த கட்டுரைசின்னக் குத்தூசி-மறுகடிதம்