அயன் ராண்ட் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

நான் இதை மிகப் பணிவாகத்தான் எழுதுகிறேன்.  ஒரு விவாதமாக அல்ல.

நீங்கள் ayn rand ஐ முழுதாக அலசாததாகவே  எண்ணுகிறேன். மற்ற விஷயங்களில் உள்ள நடு நிலை இதில் இல்லாமல் போனது போலத் தோன்றுகிறது.
தயவு செய்து சோர்வு கொள்ளாமல் predetermined notion அல்லாமல் படிக்க வேண்டுகிறேன்,

என் கருத்து
premise 1:
ஒரு விஷயத்தை சிலர் / பலர் படித்து ஆனால் தவறாக உபயோகித்தால் அந்த விஷயம் தவறாகாது.
உதாரணம் : கீதை (நான் உள்பட ) பலர் தவறாக, மேற்கோள் காட்டும் ஒரு கருவியாக ஆழமாகப் படிக்காமல் பேசுகிறார்கள் . அது கீதையின் தவறல்ல
இந்த வாதத்தை வைத்து அதற்காக எல்லாமே சரி தான் என்று சொல்ல வரவில்லை

premise 2:
சில முறை நாம் எவ்வளவு தான் உண்மையான மேதாவிகளாக இருந்தாலும் தவறு செய்வது சாத்தியம்.
உங்கள் கருத்து  இவ்விஷயத்தில் முழுமை இல்லாமல் போனதோ என்று தோன்றுகிறது. சூழல் தவறாக நடந்த சிலர் மேற்கோள் காட்டியதால் ஆன எரிச்சல் உங்களை இவ்விதம் சொல்ல வைத்ததோ என்று நினைக்கிறேன்

Truth 1:
நீங்கள் சொன்ன இரு புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் முற்றிலும் புரிந்து கொண்டு விடவில்லை

Ayn rand சொன்னதில் நான் ஏற்பது
மனிதனின் தனித்தன்மை குறித்து மீண்டும் மீண்டும் சொல்கிறார்….ஒரு தனி மனிதன் மற்றவர்களைத் (மிருகங்கள் உள்பட) துன்புறுத்தாத வரையில் அவன் செய்வது அவன் இஷ்டம் என்பது…உங்களை எழுத்து அன்றி ஊர் நலனுக்காக வேறு செயல் செய்யத் தூண்டுவது தவறான அணுகுமுறை என்பது ஒரு எடுத்துக்காட்டு…ஆனால் அது நீங்களாகவே முனைந்து செய்தால் அது உங்கள் இஷ்டம் …
மற்றவர்களைத் தியாகம் செய்ய சொல்வது தவறு
ஒவ்வொரு மனிதனும் தனக்காகவே வாழ முடியும் (உங்கள் தேடல் உங்கள் தொழில் உங்கள் குடும்பம் என்பவை உதாரணங்கள்)…
அனால் அதற்காக மற்றவரைச் சித்திரவதை செய்யலாம் என அர்த்தம் இல்லை ….அது மற்றவரின்  தனி மனித உரிமை மீறல்.
இது தான் அதன் சாரம்.
நீங்கள் சொல்லும் அதிகார கர்வம் பிடித்த அத்துணை பேரையும் கேட்டுப் பாருங்கள்.  அவர்கள் எவரும் தனி மனித சுதந்திரம்,மற்ற மனிதனின் சுதந்திரத்தில் நுழையாதிருத்தல் குறித்துப் பேசுதல் கிடையாது…மேலோட்டமாகப் படித்து ஹோவர்ட் ரோர்க் மற்றும் ஜான் கல்ட் ஐப் புரியாதவர்களே நீங்கள் சொல்லும மனிதர்கள் ….ஆழமாகப் படிக்காமல் அவர்கள் கீதை, அயன் ரண்ட மற்றும் ஜெயமோகனையே தப்பிதம் சொல்பவர்கள் தான்..Irony is that you yourself are a Howard Roark and a John Galt…in the way you behave and write…and others do not get the depth of things that you are saying…so I consider it a grave irony that you are talking about Ayn rand like others are misjudging you…Ayn rand is defintely not a charu niveditha…she has written deep stuff…
தனித் தத்துவமாகச் சிந்தித்து செயல் பட்டுத் தன் மனது,மூளை ஆன்மா எல்லாம் கொண்டு தான் விரும்பும் விஷயத்தை அறிந்து அதில் மனம் செலுத்தும் மனிதர்கள் தான் இந்த சமுதாயத்தின் தூண்கள்…இதுவே fountain head மற்றும் Atlas shrugged இன் சாரம்
தயவு கூர்ந்து “the introduction to objective epistemology” படியுங்கள்

Ayn rand கூறியதில் நான் மறுப்பது
இந்தியாவை ஒரு Mystic நாடாக மட்டுமே பார்த்தது. அவருக்கு நம் நாட்டின் மேல் நல்ல நம்பிக்கை இல்லை. அவர் ரஷ்யாவின் ஸ்டாலினின் கொடூரத்தைப் பார்த்து அதன் மூலமாக இந்தியாவைப்  பார்த்தார்…நீங்கள் அவருக்கு இழைக்கும் அநீதியை அவர் இந்தியாவுக்கு இழைத்துவிட்டார்..
அவர் செய்த மகா தவறு இது. இதை நான் இந்தியன் என்பதால் மட்டும் அல்ல …ஒரு சிந்தனையாளன் என்பதாலும் மறுக்கிறேன்

அவர் எல்லாமே rational thoughtக்குள் அடக்கம் என்ற சொல்கிறார்…உங்களின் கருத்தும் இது தான் என நினைக்கிறேன் (உங்களை நான் இன்னும் முழுதாகப்  படிக்கவில்லை…உபநிடதங்கள் குறித்து நீங்கள் எழுதியவை வெகு சிலதே படித்தும் அனுபவித்தும் உள்ளேன்…உள்ளார்ந்த realization இன்னும் இல்லை )….நான் சிறிது வேறு படுகிறேன்…எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு…அயன் ரண்டுக்குக் கிடையாது…
நீங்கள் அயன் ரண்ட் mental facility யில் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளீர் …பெரிய ஞானிகள் கூடப் பைத்தியக்காரர்களாகச் சிதரிக்கப்படுள்ளனர்…சாதரணமான சிலரும் அவ்வண்ணமே சென்றுள்ளனர்…அது எதையும் நிரூபிப்பதில்லை …ஒரு Ad-hominem attack மற்றுமே

நான் கேட்பதெல்லாம் நீங்கள் உங்கள் கசப்புணர்வை மறந்து நேரம் கிடைக்கும் போது மீண்டும் படிக்கக் கோருகிறேன்

Ayn rand in இன்னொரு இமாலயத் தவறு : மனித நேயத்தைக் குறித்து அவர் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார் ….சில சாதுக்களைப் போல…
militant ஆகக் கருத்துத் தெரிவித்துச் சென்று விட்டார்….Nathaniel Brandon போன்றோர் இந்த தவறினைச் சுட்டிக்காட்டி இதை விவரித்துப் பேசியும் உளவியல் ரீதியாக ஹோவர்ட் ரோர்க் ஆயும் ஜான் கல்ட் ஆயும் அப்படியே பின்பற்ற முதிர்ச்சியில்லாத மனதில் முயல்வதனால் ஏற்படும் கோளாறைச் சுட்டிக் காட்டியுள்ளனர்

நீங்கள் பிரம்மசூத்ரத்தில் சொன்னது போல…சில மனிதர்கள் இந்த தத்துவத்தை படித்து அகந்தை கொண்டு தவறாக நடக்கிறார்கள்…அதனால் பிரம்மசூத்திரம் தவறில்லை …அது போலவே அயன் ராண்டின் படைப்புகள்…
finally, when things are happening wrong…and they are at one end of a spectrum, typically an author or any person sometimes tries to correct course of a society and might become very militant and take it to the other end of the spectrum…I see ayn rand’s faults in this aspect….In her days, socialism and Marxism / leninism was being propogandized…and she took a militant view against them…

finally,
those arrogant folks who have total disregard, if you talk to them, அவர்களுக்குத் தனித்தன்மை இல்லாமல் கிளி போலச் சொன்னதை சொல்லும் பேதைகளாக இருப்பார்.
நான் அங்ஙனம் ஆகாமலிருக்கத் தீவிரமாக என்னை வினவுகிறேன்
அதற்கு என் நண்பனுக்கும் உங்களுக்கும் என் நன்றி
ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர் 

பார்ப்போம். நான் அயன் ராண்டை வாசித்தது 20 வருடம் முன்பு. பின்பு சில நினைவூட்டல்கள்.

மீண்டும் ஓர் ஆழமான வாசிப்பைக் கொடுக்குமளவுக்கு அவருக்கு முக்கியத்துவமுண்டா எனத் தெரியவில்லை

என் இன்றைய நிலையில் நான் மீண்டும் வாசிக்கவேண்டியவை மிக அதிகம்

ஜெ

 

அயன் ராண்ட் 1

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருகு-கடிதங்கள்