«

»


Print this Post

Srilankan War Crimes Investigation


அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,
Facebook இல் “Srilankan War Crimes Investigation” என்ற இணையப் பக்கம் ஒன்று உருவாகி உள்ளது. இது எந்த வித அரசியல் சம்பந்தமின்றி,  உள்நோக்கமும் எதுவும் இன்றி ஈழத் தமிழருக்காக ஆரம்பிக்கப் பட்டது.
இதன் நோக்கம் ஐ நாவின் அறிக்கையை எல்லா நாடுகளும் [முக்கியமாக இந்தியா] அலட்சியப் படுத்தாமல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே. இதில் அரசியல் நோக்கமோ, மொழி/மதம் போன்ற பாகுபாடோ கிடையாது.
உண்மையில் ஒவ்வொரு மனித உயிரும் முக்கியம் என கருதுபவர்கள் இந்த இணையத்திற்கு ஆதரவு தரட்டும்.  கோடிக் கணக்கில் இல்லையென்றாலும், ஆயிரக் கணக்கில் ஆதரவு கிடைத்தாலே ஐ நாவும் இந்தியா அரசும் இந்த ஆதரவை அலட்சியப் படுத்த முடியாது என்று முழுமையாக நம்புகிறேன். அது சரியில்லை இது சரியில்லை என குறைக் கூறிக் கொண்டிருப்பதை விட நம்மால் ஆனதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப் பட்டது. மனித குலத்தை ஒன்று படுத்த இனி இணையம் மிகவும் கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த மின்னஞ்சலை உங்கள் இணையத்தில் பிரசுரித்தால் ஈழத்தைப் பற்றி உண்மையில் கவலை கொள்ளும் ஒவ்வொருவரும் இதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன். மனித உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள்.
உண்மையான உணர்வு தான் முக்கியம் …ஆதலால் நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. தனிப் பட்ட மனிதரின் புகழுக்காகவோ அல்லது அரசியல் ஆதயத்திற்காகவோ இதை நான் ஆரம்பிக்கவில்லையாதலால் என் பெயரை வெளியிட விருப்பம் இல்லை.
Facebook இல் “Srilankan War Crimes Investigation” என்று தேடிப் பார்த்தால் இந்த இணையப் பக்கத்தை பார்க்கலாம்.
மிக்க நன்றி
தமிழன்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/16755