கமில் சுவலபிள், அஞ்சலி

 

தமிழ் ஆய்வாளரான கமில் சுவலபிள் அவர்களை நான் 1985ல்  மலையாள சிற்றிதழான சமீக்ஷா வழியாகவே அறிந்துகொண்டேன்.  அந்த சமீக்ஷா இதழ் அதற்கும் பத்துவருடம் முன்பு வெளிவந்தது. ஆற்றூர் ரவிவர்மாவின் நூலகத்தில் அந்த இதழ் தொகுப்பு இருந்தது.

அதில் தமிழின் சிறுகதைகளைப்பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையின் மொழியாக்கத்தை நான் படித்தபோது ஆச்சரியமும் சிறு பெருமிதமும் ஏற்பட்டது. அக்காலத்தில் தமிழிலக்கிய முன்னோடிகள் அடையாளமோ அங்கீகாரமோ இல்லாமல் முற்றிலும் ஒதுக்கப்பட்டு கிடந்தார்கள்.சராசரி தமிழ் ஆசிரியருக்கு புதுமைப்பித்தனின் பெயர்கூட தெரிந்திராத நிலை அன்றிருந்தது. செக்கோல்ஸ்வாவாகிய நாட்டு ஆய்வாளரான கமில் இந்தியா வந்து தமிழ் கற்று அச்சிறுகதைகளின் அருமையை உணர்ந்தார் என்று இளமைக்கே உரிய மனக்கிளர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன்.

 

 

கமில் சுவலபிள் மொழியறிஞர். சம்ஸ்கிருதத்தில் உயர் ஆய்வுசெய்தபின்னர் தமிழ்கற்று ஆய்வுசெய்தவர். இந்திய மொழிகளில் தமிழுக்கு உள்ள தனித்தியங்கும் தன்மை மற்றும் சம்ஸ்கிருதத்திற்கு இணையான தொன்மை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு சர்வதேச அளவில் அக்கருத்தை முன்வைத்துப்பேசிய தமிழறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியம் முதல் முத்துப்பட்டன் கதை வரை அவர் மொழியாக்கம்செய்திருக்கிறார். சங்ககாலப்படைப்புகள் முதல் மௌனி கதைகள் வரை அவருக்கு பயிற்சி இருந்தது.

கமில் சுலவபிள் ஜனவரி 17 அன்று அவரது 72 ஆம் வயதில் காலமானதாகச் செய்தி வந்திருக்கிறது. பாரீஸ் அருகே ஒரு கிராமத்தில் மனைவி நீனா சுவலபிளுடன் வாழ்ந்துவந்தார்.

பேராசிரியருக்கு அஞ்சலி

இணைப்பு 

http://muelangovan.blogspot.com/2008/11/17-11-1927.html

http://nganesan.blogspot.com/2009/01/zvelebil.html

 

அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்

ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

சுஜாதா: மறைந்த முன்னோடி

ஆதிமூலம்

அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்

குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….

அய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி

இரு மொழிபெயர்ப்புக் கதைகள் – வி .கெ .என்

சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்

முந்தைய கட்டுரைதிருவையாறு :கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியப் பரிசுகள்:கடிதங்கள்