ஈரோடு சந்திப்பு -சுகதேவ்

sugadev

 

ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா

அன்புள்ள  ஜெ ,

 

ஈரோடு  புது வாசகர் சந்திப்பு  என்  இலக்கிய வாழ்வின் முக்கியமான ஒரு திறப்பு, நான் கொண்டு வந்த கர்வத்தை எல்லாம் உடைத்து கொண்டு   மீண்டேன். நான் இன்னும் செல்ல  வேண்டிய தூரத்தை  தெளிவு படுத்த இக்கூடுகை எனக்கு உதவியது.

 

சனி காலை 11 மணி அளவில்  கோபிநாத்  அவர்களின் காரில் வந்து சேர்ந்தேன். நிகழ்வு  தோடங்கி நடந்து கொண்டு இருக்கிறது என்று கிருஷ்ணன் அவர்கள்  சொன்னார் என் சில கடிதங்களை அவர் வாசித்ததாக  கூறினார் அதில் இருந்து அவர் அட்டமைத்த சுகதேவ் இல்லை நான் என்றார்.

 

பின் நான் கூட்டத்தில் கலந்து கொண்ட  போது நீங்கள்  இயற்கைவாதம் பற்றியும், எதார்த்தவாதம்  பற்றியும் விளக்கி கொண்டு  இருந்தீர்கள். பின் விவாதம்   ஓவியங்கள் , சங்கீதம் , சிற்பங்கள் , இசை என்று பல தலங்களில் தொட்டு  தொட்டு  மீண்டது . இடையில்  உங்களுக்கே உரித்தான நகைச்சுவைகள், சினிமா மற்றும் அரசியல் சார்ந்த பேச்சுகள்  விவாதத்தை  சீராக கொண்டு சென்றது.  மற்ற வாசகர்கள் கேட்ட கேள்விகள் மூலமாக அவர்கள் எவ்வளவு ஆழமாக  படித்திருக்கிறார்கள்  என்று  புரிந்தது. என் ஆழத்தையும் நான்  தெரிந்து  கொண்டேன்  என்று  நினைக்கிறேன்.

 

மாலை நடைப்பயிற்சி  மிக இனிதாக இருந்தது . நண்பர்கள் உடன்  பேசிக்கொண்டே  சென்றோம். ஊர்  முழுக்க நம்மையே வேடிக்கை பார்த்து கொண்டு இருத்தார்கள். அந்த  கூட்டத்தில்  நான் தான் மிக இளையவனாக  இருந்தேன் , வாசிப்பிழும் . புது நண்பர்கள் அறிமுகம்  ஆகினர். நண்பர் கார்த்திகேயன் அவர்கள் , திருமலை அவர்கள்  எல்லாம்   உங்கள் எல்லா ஆக்கத்தையும்  படித்திருக்கிறார்கள் . ஒத்த சிந்தனை உடையவர்களிடம் இருக்கும்  போது ஏனோ மனம் ஒரு துள்ளளை பெறுகிறது. அனைவரும்  வயது வித்தியாசம் பாராமல்  பழகினார்கள். திரும்பி நடந்து வரும்  போது  காந்தி , அம்பேத்கார் பற்றியும் ஆங்கிலேய  ஆட்சி , பஞ்சம் எல்லாம்  குறித்து  ஏற்கனவே உங்கள் பல கட்டுரைகளிலும் பல மேடைப்பேச்சிழும்  சொன்னாலும் தங்களிடம்  இருந்து நேரடியாக   கேட்பது  புது அனுபவம் தான்.இரவு உணவுக்கு பின் மீண்டும் விவாதம் கற்பனாவாதம்,

காமிக்ஸ், பாலியல் சார்ந்த எழுத்துக்கள், என்று வேறு பல தலங்களை காட்டி சென்றது.

 

நீங்கள் எழுத்தாளர்  சார்ந்த விவாதத்தின்  போது என்னிடம்   எப்படி  என் லௌகிக வாழ்க்கையும்  என்  எழுத்து சார்ந்த ஆன்மீக வாழ்வையும்  பிரித்து  கொள்ள வேண்டிய என்  நிலையை விளக்கினீர்கள். நான்  கேட்க வந்த கேள்விக்கான  பதிலாக அது அமைந்தது.

 

அடுத்த  நாள் காலை  நண்பர் சிவசங்கர் நேற்று  மாலை ஆங்கிலேய ஆட்சி  குறித்து  கேட்ட கேள்வி  மூலம்   சிந்தனையின்  செயல்முறையை  பற்றிய பயிற்சியை  கொடுத்தீர்கள் . அது மிக  முக்கியமான  ஒன்று . பின்  நான்  தனியாக உங்களிடன்  கேட்ட  அபத்தமான கேள்வி  அதை நான் தவறாக  கேட்டு விட்டோன் என்று படுகிறது. நான் அந்த  அதிகராதத்தின் முன் தலை வணங்குதலை

பற்றி  கேட்க  எண்ணினேன். அது என்  சொந்த  விருப்பு வெறுப்பு சார்ந்ததாக மாறியது. அதுவும் நல்லதே .நீங்கள் எனக்கு  கொடுத்த   பதில்  ” ஒரு  இலக்கிய வாசகன் இப்பிடி எளிய ஒன்றுக்காக வருந்தமாட்டான்” , ” நீ என்ன  வாசகன்”. ” நீ  உன்னையே  மிக உயரத்தில்  வைத்து பார்க்கிறாய்.”   இது எல்லாமே  என் பின் மண்டையில் அடித்த என் ஆணவத்தை  உடைத்து  எரிந்து விட்டது . இலக்கியத்தை  என் எளிய   வாழ்க்கையில்  பொருத்தி பார்க்கும்  என் செயலுக்கு இலக்கியம்   இதற்கு  மேல்  ஒரு இடத்தில்  இருக்கிறது என்று  உணர்த்தினீர்கள்.  நன்றி .

 

புது  எழுத்தாளர்கள்   தங்கள்  ஆக்கங்கள்  குறித்த விவாதம் , மிக  கரராக நீங்கள் அவர்களுக்கு  அளித்த பதில்,  சிறுகதையின் வடிவம் , சிறுகதையின்     பேசுபொருள் , இது வரை  வந்த சிறுகதை வாசிப்பு  எல்லாம் புதிதாக  எழுத  எண்ணுபவர்களுக்கு  இது ஒரு அறைகூவல்  என்பதை புரிய வைத்தீர்கள் .

 

நிகழ்வு  முடிந்த பின்  என்னை நண்பர்  பிரபு  மயில்டுதுரை அவர்கள்  அறிமுகம்  செய்து கொண்டார் . என் கடிதங்களை படித்து இருப்பதாகவும் கூறினார். எனக்கே  ஆச்சரியமாக  தான் இருந்தது.  மிகவும்  அக்கறை உடனும் அன்புடனும் எதிர் கொண்டார். அவரே என்னை ஈரோடு வரை கூட்டிச்சென்றார், வழியில் இலக்கியம் சார்ந்தும் அவர் பயணங்கள் சார்ந்தும்  பேசிக்கொண்டு சென்றோம்.

 

 

விஜயராகவன் அவர்களை பற்றி வானவன் வல்லபி அக்கா  பல முறை கூறி இருக்கிறார்கள்  இந்த சந்திப்பு  அவரையும்  அறிமுகம் செய்து  கொள்ள முடிந்தது. விடை பெறும்போது உங்களிடன்  ஆசிர்வாதம்  வாங்கிக்கொள்ள வந்த என்னை கட்டித்தழுவி கொண்டிர்கள்  என் கண்கள் கலங்கிவிட்டன . தேவதேவனின்  கவிதை வரி ஒன்று நினைவில் எழுந்தது.

 

” உற்றத்திலும்  சுற்றத்திலும்

ஓர் இதயத்தைக்கூட       சந்தித்தறியாத ரசிகன்

தன் கலைஞனைக்  கண்டடைந்தவுடன்

உயிர் பெருகிச் சாவான்.”

 

இந்த 2 நாள்  சந்திப்பு   என் இலக்கிய  பயணத்திற்கு  மிக முக்கியமான ஒரு திறப்பு. என் இடத்தை நான் கண்டடையும் பயிற்சியை இந்த கூடுகை எனக்கு அளித்தது. மீண்டும்  தேவதேவனுடன்  முடித்து  கொள்கிறேன்.

 

 

” எங்கிருந்து தொடங்குவதா?

நிற்குமிடம்  அறி

அங்கிருந்தன்றி வேறெங்கிருந்து  முடியும் தொடங்க”

 

 

இப்படிக்கு ,

 

பா.சுகதேவ்.

மேட்டூர்.

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78
அடுத்த கட்டுரைகலை -கடிதங்கள் மேலும்…