பாணாசிங் -கடிதம்

banasing

அன்புள்ள ஜெ,

 

இன்றைய கல்வியாளர் ஶ்ரீதரன் அவர்களைப் பற்றிய அஞ்சலிக் குறிப்பில் “முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாணா சிங் அவர்கள் இன்னும் பணியில் இருக்கும் மூன்று பரம்வீர் சக்ரா அளிக்கப்பட்ட வீரர்களுள் ஒருவர்.

 

கார்கில் போருக்கு முன்பு வரை பணியில் இருந்த ஒரே பரம்வீர் சக்ரா வாங்கிய வீரர்.

 

பரம்வீர் சக்ரா  – https://en.wikipedia.org/wiki/Param_Vir_Chakra

 

பாணா சிங் – https://en.wikipedia.org/wiki/Bana_Singh

 

மற்ற இருவர் யோகேந்திர சிங் யாதவ் மற்றும் சஞ்சய் குமார்.

 

இவர்களின் சாதனைகள் மானுட உடல் என்பதன் சாத்தியங்களை விஞ்சுவது. உடைந்து தொங்கும் கையோடு பதினைந்து குண்டுகளை உடலில் தாங்கிக் கொண்டு 4 எதிரிகளை வீழ்த்துவது, மெஷின் கண் கொண்டு சுடுவது, அதோடு மீண்டும் தன் நிலைக்குத் திரும்பி வந்து எதிரிகளில் திட்டங்களைத் தெரிவிப்பது என்பதெல்லாம் மானுட சாத்தியமா என்ன!!! செய்தது யோகேந்திர சிங் யாதவ் – கார்கில் யுத்தத்தில்!! இது ஒரு சோறு பதம் தான். ஒவ்வொருவரும் பிறரை விஞ்சும் வகையில் தான் சாதனைகள் புரிந்திருக்கின்றனர்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

முந்தைய கட்டுரைசோபியாவின் கள்ளக்காதலன்
அடுத்த கட்டுரைவிண்ணுக்கு அருகில்…