ஊன் மிருகங்களின் வலு

P1050184

முடிவின்மையின் விளிம்பில்

ஊன் மிருகங்களின் வலு விளி, மென் அடித்தோல் கிழிந்து குடல்கள் தென்னிக் குளைகின்றன. குருதித் தெறிக்க இழுத்துக் கவ்வும், முடிவற்ற வாய்கள், அடங்காது நுழைந்து நக்கிச் செறுமும் நாக்குகள். இரை! இரை! பாவாடைகள் சரசரக்கின்றன. செம்பர் விளிம்புகளிலிருந்து முலைப் பிளவுகள் பிதுங்கி வழிகிறது. சுற்றிலும் மனித உடலங்கள், விடைத்த ஆண்குறிகளாவும், திதலை விரைத்த பெண் குறிகளாகவும் உருமாறுகிறது. தமிழ் சினிமாக்களின் மிட் நைட் ஹாட் பாடல்கள் ஒலிப்பெருக்கியில் சன்னதமெடுத்து உருள, மேடையில் உடல்கள் உடல்களல்லாது பாவனைகளால், நளினங்களால், ஊன் ஊன்! என்று அலைக்கழிகின்றன. பத்து வயது சிறுவனைப் பிடித்து தன் பாவாடைக்குள் திணித்து வெளித்தள்ளுகிறாள். ஒரு கிழவன் அவள் குண்டியைத் தடவி மீள்கிறான். ஒரு இளைஞன் அவள் முலையைப் பிதுக்கி விட, பத்து ரூபாயை அங்கு திணிக்கிறான். போதையில், உற்சாக மிகுதியில் சூழும் ததும்பல். இரவு பன்னிரெண்டு மணித் தாண்டி விட்டது. பெண்களின் எக்காளங்கள் தூரத்திலிருந்து இளைஞர்களைத் தூண்டித் துடித்து வெறிப்புடன் நிற்கிறது. ஆம்! அந்த நகைப்பொலிகள், மேடையருகில் நிற்கும் எனக்கு பகற்கனவுகளா? வெறும் மயக்குகளா? ஆண்களின் கனவுகளில், பெரும் பெரும் பிலங்களாய் பிளந்து கிடக்கின்றன, பெண்ணுடல்கள். உந்த உந்த அணையாத இருள். தோண்டத் தோண்ட நிறையும் புத்து மண். விடாய்! அத்தனையும் கவிழ்த்தாலும் குளிராதது.

டைட்டஸ் வெறும் காம மிருகமாய் உருமாறிய பின், பெண்ணுடல்கள் என்பதே அவனுக்கு இல்லாமல் ஆகுகையில், தன் சொந்த அம்மாக்கள், சகோதரிகள் அவன் உடல் பிணைகையில், அந்த பெண்ணுடல்கள் அவனை எங்கனம் உருவகித்தது. ஓட்டை வழி அவனது போகங்களைப் பார்க்கும் பெண்களின் அந்தரங்கக் காம விளையாட்டுகளில், அவனது சிறிய உடல் பெருத்து, நரம்புகள் புடைத்து எம்பி, மேற் தோல் மொட்டவிழ்ந்து எம்பித் துடிக்கிறது புவியின் மொத்த ஈர்ப்பையும் எதிர்த்து. பெண்களின் காமத்தை அறிய முயல்கையில், ஒரே ஒரு ஆணை அத்தனைப் பெண்களும் பாரபட்சமின்றி புணர்ந்து தள்ளும் காட்சிப்பிறழ்வில், அது ஆணின் பகற்கனவாகத் தான் இருக்கும் என்று தீர்மானிக்க முயல்கிறேன். ஆனால் முடியாது, அதே ஆணின் விந்தவிழ்ந்து சூம்பிப் போன குறியுடன், கவிழ்ந்து கிடக்கும் அந்த உடல்! டைட்டசின் கண்கள் சொல்ல எத்தனித்தது எதை? என்னைச் சுற்றிலும் அத்தனைப் பெண்களின், உடல் மொழியை அறிய முனைகிறேன். ஆனால் அது பிரதிபலிக்கும் பிம்பம் நான்! நான் அவர்களில் பார்க்க முயல்வது என் காமத்தை! அவர்களின் மொத்த உடலையும், யோனிப்பிதுங்கலாக பார்க்க விரும்புகிறேனா? இல்லை! நிச்சயமாக இல்லை! ஆமாமும் தான்! ஆனால் பெண்ணின் காமம் எத்தகையதாய் இருக்கிறது. ஆணுடல் அவளுக்கு எதை விளைகிறது. நான் அறிந்திருக்கவில்லை! பகற்கனவுகளில் நான் டைட்டசாய் இருந்திருக்கக் கூடாதா என்ற ஆவலும், பிறள்வும் ஒரு சேரக் கலக்கிறது.

ஆனால் அது கடவுளுக்கு எழுதும் கடிதங்கள். கணியான் கூத்தில் விடுமாடனை வருத்துகிறாள், பெண்ணுடுப்பு தரித்த ஆண். அவளது விளிக்கிணங்கி சன்னதம் கொண்டெழுவான் மாடன். மீள்கையில், பேபியன் குலத்தலைவி, தன் கடவுளின் பலிக்காக நாம் வாழ்ந்தாக வேண்டிய முடிவில், டைட்டசின் கண்களில் அந்த பாகன் தெய்வம் குடி கொண்டு குறி எம்ப, அவன் பலி கொள்ளும் எண்ணற்ற உடலங்கள், அதன் வழி துளிர்க்கும் அவனது இனம். பின் அது ஒரு வெற்றுக் காம நிகழ்வாக, சகிக்கவொண்ணாததாக மாறுகின்றன. அதே காமம் ஆனால் டைட்டசின் உடலும் வெறும் உடல்தானே! பின் வேறு வேறு உடல்கள், இந்த முறை நான்கு சுவர்களுக்குள் போதுமானது என்றாகுகையில், மேடையில் தன் ஒரு முலையை வெளிப் பிதுக்கி குலுக்குகிறாள், ஆரவாரங்கள் நின்ற பாடில்லை. மணி இரண்டு தாண்டி விட்டது. ஆண் மகன்கள் மேடையில் ஏற முயல்கிறார்கள். மொத்த ஆண்குறிகளையும் உள் தள்ளும் ஒற்றைக் குழியாய், வெறும் குழியாய் மட்டும் உடல் மாறி விடுகிறதா? இல்லை! இல்லை! காமத்தை அறிய விளையும் தோறும், விழுங்கி சக்கையாய் துப்பி விடுகிறது.

உண்மையில் உடலை அறிவது காமத்தினால் மட்டும் தானா? சள்ளையெடுக்கும் குறியைக் கொண்டு பகற்கனவுகளைத் தீராது கட்டமைக்கிறேன். கனவுகள் கண்ணாடிச்சில்லுகளாய் உடைந்து எண்ணிலடங்கா ஆடிகளாய் ஒன்றிலொன்றை விழுங்கி உருமாறி, வடிவிலித் தோற்றங்களை உருப்பெருக்கிக் கொண்டே இருக்கிறது. என் சபலங்களின் ஊடே ஒரு பெண் என்பவளை, காமத்தின் உறுப்பாய் மட்டுமே பார்க்க விளையும் மனம், அழுகி நாற எனக்குள்ளேயே புழுங்குகிறேன். பின் பக்கத்தில் லூசிபர் இதற்காக ஒட்டி வைத்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான்! நான்! என்று முனைகையில் நிர்வாணமான டைட்டசின் உடலின் சூம்பிப் போன குறியைத்தான் முதலில் கவனித்தேன். அது விடைத்திருக்கவில்லை! நன்றி! நன்றி! என்று. ஆனால் இறுதியில் ப்ரெடி நான் ஆண் தான் என்று எப்படித் தீர்மானித்தாய் என்று வினவுகையில்! ப்ரெடி புராதான பெண்ணுடைகளை அணிந்திருந்தார். அங்கு முடிவின்மையின் விளிம்பில் நொதித்துக் கொண்டே இருக்கின்றன உடல்கள். ஆண்-பெண் பார பட்சமின்றி!

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 6
அடுத்த கட்டுரைஇந்திய மருத்துவத்தின் அடுக்குகள்