சன்னி கேரளம்

சன்னி லியோனைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். கேரளம் தொழில்நுட்பரீதியாக எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று தெரிகிறது. சின்னச்சின்னப்பையன்களெல்லாம் பரவசம் அடைந்து கூச்சலிடுகிறார்கள். அதாவது சன்னி லியோன் நடித்த சினிமாக்களை பலமுறை பார்த்திருக்கிறார்கள்.

கேரளத்தில் ஆணும்பெண்ணும் பேசினாலே கம்புடன் கிளம்பிய முஸ்லீம்,இந்து கலாச்சாரக் காவலர்களில் எத்தனைபேர் இந்தக்கூட்டத்தில் இருக்கிறார்கள் என தெரியவில்லை.

நடிகர்களை அரசியலுக்கு இழுக்கும் காலம் கேரளத்தில் இப்போது.சன்னி லியோன் அம்மச்சியை மார்க்ஸிய கம்யூனிஸ்டு, காங்கிரஸ்,கேரளா காங்கிரஸ் பிஜேபி எந்தக்கட்சி சேர்த்துக்கொள்ளப்போகிறது. தோழர் சன்னிக்கு பொதுவுடைமைபற்றிய எண்ணம் என்ன? விடுதலைப்போராட்டத்தில் அவருக்கு பங்கு உண்டா? சன்னி லியோன் கிறிஸ்தவர் தானே? அவரை ஒரேயடியாக இந்துமரபின் ஆக்கசக்தியின் வெளிப்பாடு என சொல்லிவிடலாமா

என் பயமெல்லாம் கேரளத்தில் தெருவுக்குத்தெரு மண்டிக்கிடக்கும் மார்க்ஸிய, பின் நவீனத்துவ விமர்சகர்களைத்தான். அவர்கள் விழிப்புண்ர்வு அடைந்து சன்னி லியோன் சினிமாக்களின் அழகியலை ஆராய்ந்து சம்ஸ்கிருத மலையாளத்தில் எழுதவிருக்கும் கட்டுரைகளை எண்ணினால் திகிலாகவே இருக்கிறது. ஏற்கனவே இந்த நடவடிக்கைகள் சிக்கலானவை. இவர்கள் மேலும் சிக்கலாக ஆக்கினால் இடுப்பெலும்பு முறிந்துவிடுமே

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87
அடுத்த கட்டுரைவலசைப்பறவை