கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…

a

கோவை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள், மற்றும் நான் பரிந்துரைத்த நூல்களுக்கான தனி அரங்கு ஒன்றை திருக்குறள் அரசியும் கடலூர் சீனுவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.நேற்று நாஞ்சில்நாடன் அதைத் திறந்துவைத்தார்

 கொடிசீயா B ஹாலில் ஸ்டால் எண் 233

தொடர்புக்கு: 9787050464, 9442110123

நேற்று இரண்டுமூன்று மணிநேரம் அரங்கில் அமர்ந்திருந்தேன். புத்தகம் வாங்கிச்சென்றவர்களில் கல்லூரி மாணவர்கள் நிறையபேர். “என்னசார் குழந்தை இலக்கியம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கிருஷ்ணன் நக்கலடித்தார். ஒரே அரங்கில் என்னுடைய அத்தனை நூல்களையும் பார்ப்பது ஒரு பரவசத்தையும் பயத்தையும் அளித்தது. அத்தனை நூல்களில் மிகக்குறைவாகவே திரும்பச்சொல்லல் நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறேன்

அரங்கில் என்னுடைய அனேகமாக எல்லா நூல்களும் உள்ளன. வெண்முரசு ஒரே தொகுப்பாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

நேற்று மாலை எழுத்தாளர் விவாத அரங்கில் நாஞ்சில்நாடன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகீர்ராஜா ஆகியோர் நானும் என் காலமும் என்னும் தலைப்பில் பேசினார்கள்.

சு.வேணுகோபால்

Nanjil still

ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணத்தில் அமைந்தவை. கீரனூர் ஜாகீர்ராஜா ஓர் எழுத்தாளராக அவர் உருவகித்துக்கொள்ளும் மரபு, பின்புலம் என்ன என்பது குறித்து பேசினார். கண்மணி குணசேகரன் விவசாயம் சார்ந்த கிராமியப் பின்புலத்தில் இருந்து அவர் எழுந்து வந்ததன் சித்திரத்தை அளித்தார். சு.வேணுகோபால் எப்படி அவருடைய விவசாயப்பின்புலம் மெல்லமெல்ல அழிந்தது என்றும், எப்படி அவர் இலக்கியத்திற்குள் தன் மரபுத்தொடர்ச்சியை கண்டடைந்தார் என்றும் பேசினார். நாஞ்சில் மூன்று உரைகளையும் தொகுத்தளித்தார்

kanmani
கண்மணி குணசேகரன்

 

கீரனூர் ஜாகீர் ராஜா
கீரனூர் ஜாகீர்ராஜா

இன்று மதியம் அரங்குக்குச் செல்வேன். இன்று மாலைவரை அரங்கில் இருக்க உத்தேசம். நண்பர்கள் விரும்பினால் அரங்கில் வந்து சந்திக்கலாம்.

நாளை ஊட்டி சென்று வியாசப்பிரசாத் சுவாமியை சந்தித்து நிதியை அளித்துவரவேண்டும். ஊட்டிக்கு என்னுடன் வர ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் மின்னஞ்சல் செய்யலாம். காரில் இடமிருக்குமாயின் சேர்த்துக்கொள்வோம். அல்லது காருடன் வரவேண்டும்

 

முந்தைய கட்டுரைமாலை மரியாதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61