கலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்

a.v

பெங்களூரை சேர்ந்த மணிகண்டன் ஒரு புகைப்படக் கலைஞர், இவர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய புகைப்படம் கலையா? இசையின் கவிதைத் தொகுப்பிற்கான மதிப்புரை, சபரிநாதனின் கவிதைகளின் மீதான மதிப்புரை ஆகியவை ஆழ்ந்து வாசிக்கத்  தக்கது.

இவர் 16-7-2017 அன்று ஈரோடு ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் காலை 10 முதல் மாலை 5 வரை சுமார் 25 ஆர்வலர்களுக்கு ஒரு நாள் கலை அறிமுகப் பட்டறையை நடத்த இருக்கிறார். ஒரு lcd உதவியுடன் இதை செய்கிறார்.

கலையின் வரலாறு , ஓவியம் ,சிற்பம், புகைப்படம்  முதலிய கலைகளின் வகைகள் மற்றும் அவைகளுக்கு  இடையேயான  உறவு, தத்துவம் மற்றும் சிந்தனை கலைகளில் செயல்படும் விதம், கலைகளை அணுக தேவைப்படும் முன் பயிற்சி குறித்த அறிமுகம் ஆகியவை குறித்து பேச இருக்கிறார்.  அனைவரையும் அழைக்கிறோம்.  உத்தேச நிகழ்ச்சி நிரலை கீழே கொடுத்துள்ளோம்.

நிரல் :

காலை 10 -10.45 மூன்று அடுக்கு அறிதல்  மற்றும்மூன்று அடுக்கு அணுகல்

10.45-11.30 கலையின் அடிப்படைகள் இயங்கும் விதம்

தேநீர் இடைவேளை

பரப்பு கலையும் தீவிர கலையும் :

11.50-12.30 பரப்பு கலையின் பிறப்பு மற்றும் பொது புத்தி

12.30-1.15 தீவிர கலை என்பதுபரப்பு கலையின் அடிப்படையான பொது புத்தியை உடைத்தல்

மதிய உணவு இடைவேளை

2.15-3.00 கலை கிழக்கும் – மேற்கும்

ஒவியமும் புகைப்படமும்

3.00-3.45 ஒவியம் – பொது வரையறை

3.45-4.00புகைப்படம் – பொது வரையறை

4.00-5.00 வரை

தொடர்புக்கு கிருஷ்ணன் 9865916970

========================================================

  • கலைக்கோட்பாடுகளிலும் கலையிலும் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்காக மட்டும் நிகழ்த்தப்படும் வகுப்பு இது. விவாதநிகழ்ச்சி அல்ல. எனவே ஆர்வமுள்ளவர்கள் மட்டும் பங்குகொள்ளவும்
  • ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை வாசித்து ஓர் அறிமுகம் ஏற்பட்டபின்னர் பங்கெடுப்பது நன்று

========================================================

கிருஷ்ண தரிசனம் ஏ.வி மணிகண்டன்
இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்
கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்
ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்
ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்

முந்தைய கட்டுரைமலேசியா -சிங்கப்பூர் குடியேற்றம்
அடுத்த கட்டுரைவசந்தபாலனின் வெற்றி