அஞ்சலி- சசிப்பெருமாள்

11351180_850453585035300_4143526249531611741_n

இன்றுகாலை பேருந்துக்காக நின்றிருக்கையில் அருகே ஒரு மாந்தோட்டத்திற்குள் லுங்கியை தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தரவயது மனிதர் கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று நினைத்த நான் கூர்ந்து பார்த்தேன். ஹெல்மெட்டை வைத்து உள்ளிருந்து இரண்டு ஃபுல் ரம் புட்டிகளை எடுத்தார். குந்தி அமர்ந்து அவற்றைத்திறந்து நேரடியாகவே வாயில் விட்டுக்கொண்டார். தண்ணீர்கூட இல்லை. தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. நேராக மடக் மடக். ஐந்தே நிமிடம். ஒருமுறை குமட்டியபின் அருகே நின்ற ஏதோ ஒரு இலையைப் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/77509

கலாம் – கடிதங்கள்

2

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, கலாமின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்தபோது  ஒவ்வொருவரும் அவர் செய்த‌ அரிய‌, சின்ன விஷயங்களை சொன்னபோது கண்களில் முட்டி அழுகையோடு கண்ணீர் வரக்காத்திருந்தன. இளகிய மனம் கொண்டவன் என்ற பிரஞ்ஞையால் அப்படி தோன்றுவதாக நினைத்திருந்தேன். ஆனால் சின்ன ஊர்களிலும் ஒவ்வொருவரும் ப்ளக்ஸ் வைத்து மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி செலுத்துவதும், குழந்தையிலிருந்து வயதானவர் வரை உள்ளவர்களின் கபடமற்ற அழுகையை பார்க்கும்போது இந்த துக்கம் எனக்கு மட்டுமல்ல என்று தோன்றியது. எப்போதும் அடாவடி செய்யும் ஆட்டோ டிரைவர்கள்கூட …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/77437

கலாம் பற்றி சுஜாதா

எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. சுஜாதா கலாம் பற்றி எழுதிய கட்டுரை

Permanent link to this article: http://www.jeyamohan.in/77439

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62

பகுதி பத்து : கதிர்முகம் – 7 கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள். அவள் விழிகள் இவ்வுலகில் எதையுமே அறியும் நோக்கற்றவை என்று தோன்றியது. ருக்மியையோ அவனுடன் நின்ற அமைச்சர் சுமந்திரரையோ அறியாது கடந்துசென்று தன் தேரிலேறிக் கொண்டாள். ருக்மி அமிதையை தன் விழிகளால் அருகே அழைத்து மெல்லியகுரலில் “உளவுச் செய்தி ஒன்று வந்துள்ளது செவிலியே. …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/77411

வண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது

7

இவ்வருடத்தைய எஸ்.ஆர்.எம் விருதுகள் புனைவிலக்கியத்துக்காக கல்யாண்ஜிக்கும் மொழியாக்கத்துக்காக ஆர்.சிவக்குமாருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கல்யாண்ஜி என்னும் வண்ணதாசன் தமிழின் நுண்ணிய புனைவிலக்கியவாதிகளில் ஒருவர். எந்த விருதுக்கும் தகுதியானவர். அவர் பெறும் இவ்விருது அவரால் பெருமைகொள்கிறது ஆர்.சிவக்குமார் நான் தர்மபுரியில் பணியாற்றியகாலத்தில் நன்கு அறிமுகமான நண்பர். முக்கியமான மொழியாக்க நிபுணர். அவர் மொழியாக்கம் செய்த லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் தமிழில் அன்று ஒரு இலக்கியமாற்றத்தை உருவாக்கியவை. இப்போது மேலைத்தத்துவத்தை எளிமையாக அறிமுகம்செய்யும் சோஃபீஸ் வேர்ல்ட் என்னும் நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார். விருதுபெற்றவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/77480

அமெரிக்கப்பயணம் புகைப்படங்கள்

2

அமெரிக்கப்பயணத்தின் புகைப்படத்தொகுப்பு தொகுப்பு ஒன்று தொகுப்பு இரண்டு

Permanent link to this article: http://www.jeyamohan.in/77458

கலாம்- கேள்விகள்

index

அன்புள்ள சார் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இறந்த்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த அஞ்சலி செய்திக்குறிப்புகள் வ(ளர்)ந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் என் நண்பர் (மருத்துவர்) ஒருவரே வேறு விதமாக ஆரம்பித்தார்.. அவர் நகராட்சி பள்ளிகளுக்கு என்ன செய்தார் என.. அப்போதிருந்த மனநிலையில் அவரை எதிர்த்து பேச என்னிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன. அவரை எள்ளி நகையாடியாயிற்று.. அதன்பின் சாரு எழுதிய பதிவை ரகு கொடுத்தான். சாரு அவரை ரஜினியுடன் ஒப்பிட்டிருந்தார். விவேக்கையும் வைரமுத்துவையும் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/77432

3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு  ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது” நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/1337

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61

பகுதி பத்து : கதிர்முகம் – 6 கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின் பாகன் தன் பீடத்தில் ஏறிக்கொண்டான். புரவிகள் குளம்போசை எழுப்பி முன்பின் கால் வைத்து நின்ற இடத்திலேயே அசைந்து நிற்க பொறுமையற்றது போல தேர் தோரண மணிகள் குலுங்க உடல்கொண்ட ஒளிகள் நலுங்க சற்று அசைந்தது. இளவரசி அறைநீங்கிவிட்டார் என கட்டியங்காரனின் சங்கொலி …

மேலும் »

Permanent link to this article: http://www.jeyamohan.in/77375

எம்.எஸ்.வி பாடும்போது

இளையராஜா ஒருமுறை சொன்னார், ”எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன் ஷாஜி எழுதி [நான் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து உயிர்மையில் முன்பு வெளியான ] கட்டுரை

Permanent link to this article: http://www.jeyamohan.in/77336

Older posts «